தை

பதிவு #3, © துரை வரதராஜன், 2022

பொங்கலோ பொங்கல்!

இனிது
புதிது
பொலிவு
பெற்ற தை!

புத்துணர்வு
கொடுத்த தை!

புதுப் பானை
பொங்கிய தை!

புன்னகை
பூத்த தை!

இல்லறம்
புதுப்பொலிவு
பெற்ற தை!

யாம்
நன்றி
சொல்வ தை!

ஏற்றுக்கொள்ள
உம்
மன தை!

எம் மனம்
விரும்புவ தை!

பதிப்பித்தேன்
ஏற்றுக் கொள்ளவும்
முடிந்த தை!

வாழ்க வளமுடன்!

புரவலர்கள் தம்பி தங்கைகள்
அன்பு இல்லத்தினர்கள்
பிரியமான இளந்தளிர்கள்
ஏனைய குடும்பத்தார்
உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும
இன்புற்றிருக்க
தைத்திருநாள்
பொங்கல் வாழ்த்துக்கள்! மனம் நிறைந்த நன்றிகள்!

Leave a comment

Leave a comment