விநாயகா! விநாயகா!

துரை வரதராஜன்

பதிவு #1, © துரை வரதராஜன், 2022

விநாயகா! விநாயகா!

வாழ்விப்பாய்! வாழ்விப்பாய்!
வாழ்த்திடுவோரை
வாழ்விப்பாய்!

வளம் தருவாய்! வளம் தருவாய்!
வலம் வருவோர்க்கு
வளம் தருவாய்!

வழங்கிடுவாய்! வழங்கிடுவாய்!
வணங்குவோருக்கு
வழங்கிடுவாய்!

வளர்த்திடுவாய்! வளர்த்திடுவாய்!
வழி வழியாய் வரும் வம்சத்தை
வளர்த்திடுவாய்!

தீர்த்திடுவாய்! தீர்த்திடுவாய்!
தீர்க்கமுற வினைகள்தீர
தீர்த்திடுவாய்!

விநாயகா! விநாயகா!

  1. Nedunchezhian p's avatar

    உங்களின் இறை நம்பிக்கையும், ஆன்மீக உணர்வும் தழைத்தோங்க வாழ்த்துக்கள். உங்களின் தமிழ் மொழி உணர்வும், கவிதை திறனும் என்னை ஆச்சரியப்பட வைத்தது. கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக…

  2. Dr. N.kamalarajan's avatar

Leave a comment