பதிவு #7, © துரை வரதராஜன், 2022
கல்விப் பணி அறப் பணி
கற்போர் கால இடைவெளியின்றி கற்க வேண்டும்,
கற்பித்தல் காலாகாலத்திற்கு நிலை பெற வேண்டும்.
பள்ளி நிருவாகம், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் கருத்துருக்கள், கலந்தாய்வு மற்றும் தீர்மானங்கள்.
பள்ளி திறப்பது எந்த நிலையில் இருப்பினும், பெற்றோர்களிடையே குழந்தைகளின் மீதான அக்கறையும் நுண்கிருமி தாக்குதலைச் சமாளிக்கக் கூடிய, உடல்ரீதியான பலமும், மனரீதியான விழிப்புணர்வும் அவர்களின் குழந்தைகளிடம் இருக்கிறதா என்பதை அறிய வேண்டும். இல்லையேல் முறையே அதை எதிர்கொள்வது மற்றும் அதற்கான புரிதல் ஏற்படுத்துவது எவ்வாறு என்ற ஐயம் சற்று அதிக பய உணர்வுடன் இருப்பினும், அவர்களின் குழந்தைகள் எந்நிலையிலும் அறிவும் ஞானமும் ஆசிரியர்கள் நேரடிப் பார்வையில் கீழ்ப்படிந்து கற்க வேண்டும் என்ற ஆவல் நிறைய உள்ளது.
இந்த நேரத்தில்கல்வித்துறையின் பங்கு என்ன?
அதற்கான பதில் என்ன?
பெற்றோர்களின் கேள்வியும், எதிர்பார்ப்பும்
அதிக நேரம் முகவுறை அணிந்து வகுப்பறையில் சக மாணவர்களுடன் அமர்ந்து இருப்பது சாத்தியமா? தண்ணீர் பருகும் போதும் மற்றும் உணவருந்தும் போதும் முகவுறையை நீக்க வேண்டிய நிலையில் சக மாணவர்களின் சுகாதாரத்தை எவ்வாறு அறியமுடியும்.
சாதாரண நாட்களில் கூட ஜலதோஷம் மற்றும் மூச்சுத்திணறல் உள்ள குழந்தைகளுக்கு நுண்கிருமியை எதிர்கொள்ளக்கூடிய நோய் எதிர்ப்பு சக்தி இருக்குமா? இல்லையேல் எவ்வாறு பள்ளிக்கு அனுப்ப முடியும்? பள்ளிக்கு அனுப்ப முடியாத சூழ்நிலை இருப்பின், இதைப்போன்ற குழந்தைகளுக்கு எவ்வாறு கற்பிப்பது?
தனிமனித சமூக இடைவெளியைக் கடைபிடிப்பது மற்றும் உணவு பொருட்களைச் சகமாணவர்களுடன் பகிர்வதைத்தவிர்ப்பது, இடைவேளை நேரங்களில் மற்றும் கழிப்பறை பயன்படுத்தும் போது கண்காணிப்பது எந்நேரமும் சாத்தியமா?
பொதுநல நோக்கர்கள், கல்வியாளர்கள் கருத்து
- கட்டாயம் தரமான முக உறை அணிந்து வரச்செய்தல்.
- நுழைவுவாயிலில் வெப்பநிலையை பரிசோதித்துப் பார்க்க வேண்டும்.
- கொரோனா அறிகுறிகள் காய்ச்சல், இருமல் மற்றும் சளி போன்ற ஏதேனும் தொந்தரவுகள் இருக்கிறதா? என்பதைக் கேட்டுப் பள்ளிக்கு உள்ளே அனுமதிக்க வேண்டும்.
- வகுப்பறை நல்ல காற்றோட்டம் உள்ள வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும்.
- தனிமனித சமூக இடைவெளியைக் கடைபிடிக்கும் அளவுக்கு, ஒரு நீண்ட இருக்கையில் இருவர் என்ற அளவில் மாணவர்களை அமரச் செய்யலாம்
- மாணவர்கள் பரவலாக அமர்வதற்கு ஏதுவாக “ஷிப்ட்” முறை தேவையானால் நடைமுறைப்படுத்துவதற்கு ஏற்பாடு செய்யலாம்.
- பள்ளிப்பாட வேளை நேரத்தைப் பாதியாக குறைத்து வகுப்புகள் எடுக்கலாம். குறிப்பாக காலைவேளை மட்டும் வகுப்புகள் நடத்தலாம்.
- தேவையானால், அரசுத்தேர்வு எழுதும் 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதியம் சிறப்பு வகுப்புகள், செய்முறை வகுப்புகள் மற்றும் அலகுத்தேர்வுகள் தினமும் நடத்தலாம்.
- மற்ற வகுப்புகள் வாரம் மூன்று நாட்கள் ஒருநாள் விட்டு ஒருநாள் காலை வேளையில் மட்டும் நடத்தலாம்.
- மாணவர்கள் உணவு உண்பதை வீட்டிலேயே முடித்துவிட்டு வரும் வகையில் பள்ளியின் தொடக்க நேரத்தையும், முடிக்கும் நேரத்தையும் மாற்றம் செய்யலாம்.
- குழந்தைகளுக்குச் சோப்பு போட்டு கை கழுவும் வசதியை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.
- முக்கியமாக கழிப்பறை நன்கு பராமரிக்க வேண்டும், மாணவர்கள் கூட்டமாகச் செல்லாமல் தனித் தனியே அவசியம் எனில் தக்க கண்காணிப்புடன் அனுப்பி வைக்கலாம்.
- நிலைமை சீராகும் வரை பள்ளியில் கூட்டுப் பிரார்த்தனை, கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுகள் மற்றும் அரங்க நிகழ்வுகள் தவிர்க்க வேண்டும்.
- நன்கு பயிற்சிப் பெற்ற செவிலியர்களைக் கொண்டு பள்ளியில் பணிக்கு அமர்த்தலாம்.
- பள்ளியில் இருந்து வீட்டுக்குக் குழந்தைகள் திரும்பியதும், வீட்டின் வாசலிலேயே கைகளை சோப்புப் போட்டுக்கழுவி, உடைகளை மாற்றியபின், வீட்டின் உள்ளே அவர்களை அனுமதிக்கலாம்.
- பள்ளியில் உபயோகப்படுத்தியப் பொருட்களை, கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்த பிறகு வீட்டில் உபயோகிக்க வேண்டும்.
- சத்துள்ள உணவுகளை உண்டு, முறையாக உறங்கி விழித்தெழ வழிகாட்டலாம்.
பள்ளிக்குச் சென்று வந்த குழந்தை பகிரும் அனுபவமும், அன்பும் தான் பெரும்பாலான குடும்பங்களை இனிதாக இயக்கிக் கொண்டிருக்கிறது. பள்ளிக்குச் சென்று மாணவர்கள் கல்விக் கற்று பயன் பெறும் முக்கியத்துவத்தை உணர்ந்ததன் அடிப்படையில் அனைத்துப்பெற்றோர்களும் அவரவர் குழந்தைகளைக்கட்டாயம் பள்ளிக்கு அனுப்ப வேண்டும்.
உடல் இயங்க உயிர் வேண்டும்.
மாணவர்கள் மாண்பு பெற பள்ளிக்கல்வி வேண்டும்.
ஒவ்வொரு மாணவனும் தனது சக வகுப்பு தோழர்களிடையே நேரடியாக கலந்து உரையாடி மனநிறைவுடன் பேசுகின்ற போது அவனுடைய அடிப்படையான திறமையை உணர்ந்து வெளிக்கொணரமுடியும், மேலும் நடப்பு நிகழ்வுகள் மூலம் சமுதாயத்தின் காலப் போக்கை உணர்ந்து அதற்கேற்ப தனது போக்கை நன்கு மாற்றி அமைக்க முடியும்.
இந்த நிகழ்வுகள் ஆசிரியர் கண்காணிப்புடனும் சிறந்த வழிகாட்டல்களுடனும் இருக்கும் போது மேலும் ஓர் திடமான அறிவாற்றல் பெருகும்.
குழந்தைகளுக்கான பாதுகாப்பு வசதிகள் பெருகச் செய்கின்ற வகையில் அரசு மற்றும் பள்ளி நிருவாகம் அதற்கான பொருளாதார உதவிகளைஅதிகப்படுத்த வேண்டும்.
இதனால் சுகாதாரம் மேம்படவும் சத்துள்ளப்புரதம் நிறைந்த உணவு மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுக்கக் கூடிய சித்த ஆயுர்வேத மூலிகை குடிநீர், மூலிகை மருந்துகள் தக்க முறையில் கொடுக்க வழிவகைகள் செய்ய வேண்டும்.
ஆரோக்கியமான குழந்தைகளுக்கு அறிவாற்றல் பெருகும்.
அறிவாற்றல் பெற்ற குழந்தைகளுக்கு ஆரோக்கியம் மேம்பட வழிவகுக்கும் அனைவருக்கும்.
பள்ளிகள் கட்டிடம் மட்டும் அல்ல வருங்கால சமுதாயத்தை உருவாக்கும் இறையாற்றல் நிரம்பிய அறிவு திருக்கோயில்.
ஒவ்வொரு குழந்தையின் வாழ்நாளில் தவிர்க்க கூடாத இடம் பள்ளிக்கூடம். பள்ளிக்கூடங்கள் அவர்கள் மனரீதியாக, எண்ணம் மேம்பட , அறிவு மற்றும் ஞானம் புதுப்பொலிவு பெற கலாச்சாரம் பண்பாடு பிறழாமல் போதிக்கும் நற்சிந்தனையாளர்கள் மற்றும் நல்லாசிரியர்கள் நிரம்பிய அறிவுச் சாலை.
பள்ளித் திறப்பது அனைவரது மனதிலும் எண்ணத்திலும் முன்னுரிமைதர வேண்டும். அவரவர் நிலையிலிருந்து அனைத்துக் குழந்தைகள், ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்புச் செம்மையாக இருக்கும் வகையில் உத்தரவாதம் இருக்க வேண்டும்.
பெற்றோர்கள், ஆசிரியர்கள், பள்ளி முதல்வர்கள் , நிர்வாகத்தினர், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கருத்துகளின் அடிப்படையில் தொகுக்கப்பட்டது.
It’s really poetic and fantastic plot sir
உங்களின் இறை நம்பிக்கையும், ஆன்மீக உணர்வும் தழைத்தோங்க வாழ்த்துக்கள். உங்களின் தமிழ் மொழி உணர்வும், கவிதை திறனும் என்னை ஆச்சரியப்பட வைத்தது. கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக…