பதிவு #8, © துரை வரதராஜன், 2022
கிழக்குச் செவ்வானம்
வெளுக்கும் முன்னே
சேவல் கூவும்!
சேவற் கொடியோன்
செவி மலர.
அல்லி தாமரை
மலரும் முன்னே
தாய்மார் கோலமிடும்!
எருது வாகனனருள்வான்
ஏர் இயங்கவே.
தர்மம் தலைப்பணி
தன்பசி ஆறாவிடினும்
தன்மனையில் தவமிருப்பர்!
தவறாது பசியாறுவர்
தன்னை நாடியோர்.
தன்பிள்ளை தன்கொள்ளை
தாழாது தழைத்திடவே
தன்கணவர் களைக்கவிடார்!
காப்பதே கருமமாயினர்
கருத்தொற்றுமை உடையார்.
உற்றார் உறவினர்
உறவாடி கலந்துரையாடி
விரும்பியவர் விளையாடுவர்!
விடைபெறுவர் விருப்பமுடனே
வின்னவர் வாழ்த்திடவே
உங்களின் இறை நம்பிக்கையும், ஆன்மீக உணர்வும் தழைத்தோங்க வாழ்த்துக்கள். உங்களின் தமிழ் மொழி உணர்வும், கவிதை திறனும் என்னை ஆச்சரியப்பட வைத்தது. கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக…
It’s really poetic and fantastic plot sir
It’s really poetic and fantastic plot sir
LikeLike