பதிவு #14, © துரை வரதராஜன், 2023
விளையாட்டு விழா 6 ஜனவரி 2023
அரசினர் மேல்நிலைப்பள்ளி,
வாண்டையார் இருப்பு.
பரிசளிப்பு விழா – முன்னிலை மற்றும் சிறப்புரை
து வரதராசன்,
” கல்வியாளர்”
கீழஉழுவூர் – தஞ்சாவூர்,
1975-1980 ( VI Std., – X Std.,) Alumni,
School First Rank holder in
X Public Exam March 1980
Govt. Hr.Sec.School, Vandayariruppu.
1989 – 2021 Formerly Principal,
Maxwell Martric. Hr. Sec. School, Thanjavur.
———————————————————
நல்வழி காட்டும் நம் பள்ளி!
வாண்டையாரிருப்பு
அரசு மேல்நிலைப்பள்ளி.
துரை வரதராசன் ,
முன்னாள் மாணவர்,
6 ஜனவரி 2023.
வணக்கம்!
அறிவோம் நன்றாக குரு வாழ்க குருவே துணை!
தெளிவு குருவின் திருமேனி காண்டல்;
தெளிவு குருவின் திருநாமம் செப்பல்;
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்;
தெளிவு குரு உருச் சிந்தித்தல் தானே.
..,………….………திருமந்திரம் 139
அன்பிற்கும், பண்பிற்கும் உரிய அறிவுசார் பெரியோர்களே! அவையோர்களே ! அனைவருக்கும் வணக்கம்! வாழ்த்துகள்!
இனிதே நடைபெறும் நமது பள்ளியின் விளையாட்டு விழா 2022-2023 சிறப்பாக இருக்கும் இவ்வேளையில் எனது அன்பிற்கினிய வாழ்த்துகள் மட்டுமன்றி மனமார்ந்த பாராட்டுகள்!
நமது வாண்டையார் இருப்பு அரசினர் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு விழாவினை
சிறப்பாக நடத்தும்
பள்ளியின்
தலைமை ஆசிரியர்
திரு G. கார்த்திகேயன் அவர்களே,
உதவி தலைமை ஆசிரியர்
திரு V. சஞ்சாய் அவர்களே
உடற்கல்வி ஆசிரியை
திருமதி வெ. திலகவதி அவர்களே
உடற்கல்வி ஆசிரியர்
திரு இராமகிருஷ்ணன் அவர்களே
மற்றும் ஏனைய ஆசிரியப் பெருமக்களே!
இவ்விழாவிற்கு உறுதுணையாக இருக்கின்ற
பெற்றோர் ஆசிரியர் கழகத்தின்
தலைவர்
திரு R இரதிகிருஷ்ணன் அவர்களே
மற்றும் அங்கத்தினர்களே!
என்றென்றும் இப்பள்ளியின் வளர்ச்சியில் மட்டுமல்லாமல் அனைத்து வெற்றிக்கும் உறுதுணையாக இருக்கின்ற பெற்றோர்களே!
எல்லாவகையிலும் இந்நிகழ்வு சிறப்பாகவும் அனைத்து நிலைகளிலும் பயனுள்ளதாகவும் இருக்க உற்சாகத்துடன் பங்கேற்று பரிசுகளையும் பாராட்டுகளையும் பெறும் மாணவ மாணவியர்களே!
உங்கள் அனைவரையும் வாழ்த்துவதோடு பாராட்டி மகிழ்கிறேன்!
இவ்விழாவின் துவக்க மற்றும் பரிசளிப்பு விழாக்களில் பங்கேற்று சிறப்பித்துக் கொண்டு இருக்கின்ற
முதன்மை கல்வி அலுவலர்
உள்ளிட்ட தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறை அலுவலர்களே !
சிறப்பு அழைப்பர்களாக வருகைதந்து
முன்னிலைவகித்து
வாழ்த்துரை வழங்கி
பரிசளிக்க உள்ள
சிறப்பு விருந்தினர்களே!
முன்னாள் மாணவர்களே!
மற்றும்
புரவலர்களே!
உங்கள் அனைவருக்கும் நன்றி!
ஜுன் 1975ஆம் ஆண்டு
இப்பள்ளியில்
ஆறாம் வாகுப்பில்
அடியெடுத்து வைத்த
முதல் நாள்
என் நினைவுகளில்
இன்றும் பசுமையே!
புலவர் ஜம்புலிங்கம் ஐயா அவர்கள்
தாய்மொழி தமிழை கண்டிப்புடன்
நற்பாங்காக கற்பித்தது
நன்முறையின் நன்முறையே!
திருமதி ரமணிபாய் ( ஆறாம் வகுப்பு வகுப்பாசிரியை)
ஆங்கிலம், கணக்கு சொல்லிக் கொடுத்தது
திருமதி வசந்தாபாய் ( ஏழாம் வகுப்பு வகுப்பாசிரியை)
அறிவியல்,சமூக அறிவியல் நடத்தியது
அற்புதமே!
புலவர் முத்துக்கண்ணு ஐயா,
புலவர் வேங்கடாசலம் ஐயா
தமிழை தன்னார்வத்துடன் நடத்தியதோடு மட்டுமல்லாது
மாணவர்மன்றம், மதுரைத்தமிழ்ச்சங்கம்
மற்றும்
தஞ்சைமாவட்ட தமிழாசிரியர் கழகத் தமிழ் தேர்வுகளை நடத்திய விதம்
மிகவும் சிறப்பு.
திரு.GV ( G வேங்கடாசலம்)Sir
(எட்டாம் வகுப்பு வகுப்பாசிரியர்),
திரு. பாண்டியன் சார் (ஒன்பதாம் வகுப்பு வகுப்பாசிரியர்)
மற்றும்
M. சுவாமிநாதன் சார்
தலைசிறந்த கணித ஆசிரியர்கள்.
திருமிகு G நாராயணசுவாமி ஐயா
கண்டிப்பின் இருப்பிடம், காலம் தவராத திருமகன் மாணவ மாணவியரின் பற்றாளர், நொடிப்பொழுதும் அயராது வகுப்பு எடுப்பது அவரின் அத்தியாவசிய பணி! நின் புகழ் வாழ்க! உங்களது நாமத்தை என்றென்றும் செப்புவதோடு திருவுரு காண்கிறோம்!
மற்றும்
திரு தியாகராஜன் சார் உட்பட அனைவரும்
சிறந்த அறிவியல் ஆசிரியர்கள்.
திருவாளர் G செம்பையன் சார்
மிகச் சிறந்த சமூக அறிவியல் ஆசிரியர் மட்டுமல்லாது மாணவ மாணவியர் களை நன்கு படிப்பதற்கு ஊக்குவித்ததோடு கண்டிப்பாகவும் நடத்திய நல்லாசிரியர், ஐயா வின் புகழ் ஓங்குக!
பிற்காலங்களில் நல்லதொரு தலைமையாசிரியராக இருந்தபோது அவருடன் தலைமையாசிரியர் கூட்டங்களில் நான் பலமுறை சேர்ந்து பங்குபெறும் வேளைகளில் எனக்கு நல்ல அறிவுரைகள் கூறுவதோடு சிறப்பாக வழிநடத்துவார். என்றும் அன்னாரின் திரு வார்த்தைகள் எங்களது செவிகளில் ஒலிக்கிறது!
திரு மீனாட்சிசுந்தரம் அவர்கள்
( பத்தாம் வகுப்பு வகுப்பாசிரியர்)
நல்லதொருஆங்கில ஆசிரியர், ஆங்கிலத்திலேயே விளக்க உரை இருக்கும், மிகவும் கட்டுப்பாடான ஆசிரியர்.
திரு கட்டபொம்மன் அவர்கள்
வணிகவியல் ஆசிரியராக இருந்தாலும் நன்கு ஆங்கில பயிற்சி தருவார்.
திருவாளர் கோ கருணாகரன் சார்
அவர்கள்
பன்முகத் திறன் கொண்ட ஓவிய ஆசிரியர், அவர் ஓர் நல்லாசிரியர்.
ஓவிய பயிற்சி மட்டுமல்லாது
தமிழ்,ஆங்கில எழுத்து மற்றும் சொற்களஞ்சிய பயிற்சி ஏடுகள்,
அறிவியல் செய்முறை சார்ந்த படங்களின் பயிற்சி ஏடுகள்,
பராமரிப்பதோடு முறையாக தேர்வுக்கு தயார் செய்யும் பயிற்சி அளிப்பது,
ஓவிய உபகரணங்கள் மற்றும் கணித வரைபட பெட்டி
பராமரிப்பதோடு அவற்றில் உள்ள உபகரணங்களை கையாளும் முறைகளை கற்றுத் தருவார்.
ஓவிய ஆசிரியராக வகுப்பு எடுத்தாலும் சரி
தேர்வு அரை கண்காணிப்பாளராக பணியாற்றினாலும் சரி
அன்றைய பொழுதில் செம “டெரர்” தான்.
விளையாட்டு விழாவிற்கு இவர் தயார் செய்யும்
வெற்றிமேடையின் அழகின் சிறப்பு
அதிலும் எண் ஒன்று மேடையில் நின்று கௌரவப்படும் போது வான் நின்று வாழ்த்தும் தேவதைள் கண்ணுக்கு குளிரூட்டுவார்கள்.
வட்டார மாவட்ட அளவில் விளையாட்டு போட்டிகளில் மாணவர்கள் அணிய அவர் தயார் செய்யும்
“Stencilled Baniyan with School Name and Number “
பனியனை அணிந்து கொள்ள மிகவும் விருப்பம்!
உடற்கல்வி ஆசிரியர்கள்
திரு வடிவேல் சார்
மற்றும்
திரு செம்பைய்யன் சார்
புனிதமான நன்நெறியாளர்கள்,
செம்பைய்யன் சார் பிரம்பு மட்டுமல்ல விசில் கயிறும் சாட்டை தான்.
ஒவ்வொரு வருடமும் “பேட்டரி டெஸ்ட்” கட்டாயம் உண்டு.
800 மீட்டர் ஓட்டம் முடிந்தால் எனக்கு அந்த வருட படிப்பே முடிந்தது போன்று இருக்கும்.
அதனால் தானோ என்னவோ பத்தாம் வகுப்பு படிக்கும்போது 1979-’80 பள்ளி விளையாட்டு போட்டிகளில் மேலோர் பிரிவில் சாம்பியன் ( First in 100m, First in 1500m & Second in Shot Put).
ஒவ்வொரு வருடமும் தவறாமல் நடைபெற்ற விளையாட்டு விழா தான் மிகப்பெரிய திருவிழா.
அதனால் தான் என்னுடைய பணிக் காலங்களில் பள்ளி விளையாட்டு விழா, அறிவியல் கணாகாட்சி, தமிழ், ஆங்கில & ஹிந்தி இலக்கிய மன்றம் மற்றும் கலை நிகழ்ச்சி விழாக்கள் சிறப்பாக நடத்தப்பெற்று நான் தலைமைப் பொறுப்பில் இருந்த போது தொடர்ச்சியாக ஒவ்வொரு கல்வி ஆண்டிலும் தஞ்சை மேக்ஸ்வெல் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் சிறந்ததாக இருந்தது போலும்.
இப்பள்ளியின் தேர்வு நடைமுறைகள் முறையாகவும் மந்தணமாகவும் இருக்கும்.
எனக்கு இந்த நடைமுறை ஓரு மாடலாகவும் இந்த கட்டுப்பாடு மற்றும் வழிகாட்டல் அடிப்படையில் தேர்வு எழுதியாதல்
பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் பள்ளியில் முதல்மாணவனாக
வந்ததோடு அல்லாமல்
நான் தலைமைப் பதவியை வகித்த பள்ளியில் பலமுறை மாவட்ட மாநில அளவில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுகளில் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலைகளை பெறமுடிந்தது.
இந்த பள்ளியில் அப்போதைய தலைமை ஆசிரியர்
திரு கஜேந்திரன் அவர்கள்
நல்லதோர் பண்பாளர் சிறப்பாக அனைவரையும் வழிநடத்தினார், தினமும் காலையில் நடைபெறுகின்ற பிரார்த்தனை கூட்டம் சிறப்பாகவும் முறையாகவும் இருக்கும்.
என்னுடைய பணிக் காலங்களில் நம் பள்ளியில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் மாதிரியாக வைத்து நன்கு செயல்படுத்தினேன்!
வெற்றி மேல் வெற்றி பெற்றேன்!
எங்களது கீழஉழுவூர் கிராமத்திலிருந்து
ஏறக்குறைய நூற்று ஐந்து மாணவ மாணவியர்
இங்கு ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்தோம்.
நாங்கள் அனைவரும் இங்கு படிப்பதற்கு அனைத்து வசதிகள் இருந்தாலும் அதை முறையாகவும் பாதுகாப்பாகவும் பராமரித்து வந்த பெறாறோர் ஆசிரியர் கழகத்தின்
தலைவர்
திரு சீனியய்யா வாண்டையார்
உள்ளிட்ட அனைத்து அங்கத்தினருக்கும் நன்றி கூறுவது எங்களது தலையாய கடமை.
தற்போதைய பள்ளி தலைமையாசிரியர்
திரு G கார்த்திகேயன் அவர்கள்
பழைய மாணவர்கள் கழகம்(Alumni) குறித்து பேசியது எனக்கு மிக்க மகிழ்ச்சி
அனைவரோடும் இணைந்து செயல்படுவதிலும் பள்ளி மென்மேலும் வளர்ச்சி அடைந்து நம்பகுதியில் வசிக்கும் அனைத்து சமூகத்தினருடைய குழந்தைகளும் கல்வியறிவு வளர்ச்சி பெறுவதில் பெறுமையடைகின்றேன்.
இந்த நிலையில்
நமது தமிழக அரசின் பள்ளிகளுக்கான புதிய திட்டமான
“School Foundation System”
மேலும் வலுவடையும் என்று நம்புகிறேன்.
தற்போதைய பெற்றோர் ஆசிரியர் கழக
தலைவர் திரு R இரதிகிருஷ்ணன் அவர்கள்
உள்ளிட்ட அங்கத்தினர்கள் அழைப்பிதழுடன் வரவேற்றபோது மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்.
இந்த அழைப்பின் மூலம்
எங்களது கீழஉழுவூர் கிராமத்திலிருந்து வந்து படித்த படித்துக் கொண்டு இருக்கும் அனைத்து மாணவ மாணவியர் மற்றும் அவர்களது பெற்றோர்கள் பெருமையடைவதாகவே கருதுகிறேன்.
அன்றையநாள் முதல் இன்றைய நாள்வரை உள்ள
அனைத்து தலைமையாசிரியர்கள் அவர்களுடன் அயராது உழைத்த உழைத்துக் கொண்டு தங்களையே அர்பணித்துக் கொண்டு இருக்கின்ற ஆசிரியபெருமக்களை பெருமைப்படுத்தும் வகையில் எஅவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்!
அவர்கள் அன்பு குடும்பம் வாழ்க வளமுடன்!
இப்பள்ளியில் பயிலும் ஒவ்வொரு மாணவ மாணவியரும்
” இவன் தந்தை இவனைப் பெறுவதற்கு என்ன தவம் செய்தானோ!”
என்ற கூற்று நிரூபணம் ஆகின்ற வகையில்
பெற்றோர் ஆசிரியர் சொல் கீழ்படிந்து
கற்றலிலும் அதன்வழி நிற்றலிலும் முதன்மை பெற்று
“அவையத்து முந்தியிருப்ப செயல்”
என்பதற்கேற்ப
இருக்க வேண்டும் என்று சொல்ல கடமைப்பட்டு இருக்கிறேன்.
கற்றல் கற்பித்தல்
முறையாக
ஈடுபாட்டுடன் செயல்பாட்டுக்கு வருகின்றபோது முழுமையான பயன் கிடைக்கும்.
மாணவ மாணவியரின் தன்னார்வ தொடர் முயற்சி,
ஆசிரியர்களின் ஈடுபாட்டுடன் கூடிய கற்பித்தலில் மேன்மைத் திறன்
மற்றும்
மாணவ மாணவியர் மேம்பாட்டுக்கான நல்ல நோக்கம்,
பெற்றோரின் நம்பிக்கையுடன் கூடிய நன்னெறி அனுகுமுறை,
தலைமையாசிரியர்
தனது தலையாயப்பணிகளின் முக்கியத்துவம் அறிதல்
மற்றும்
தொலைநோக்கு சிந்தனை,
பெற்றோர் ஆசிரியர் கழக அங்கத்தினரின்
உற்றுநோக்களின் மூலம் நடுநிலையோடு நல்லதை ஏற்று தீயதை களைந்து செயல்படுதல்
மற்றும்
ஆய்வு அதிகாரிகள்
கற்றல் கற்பித்தல் வலுவடைய,
மாணவ மாணவியர்
சூழ்நிலைக்கேற்ப கற்கும் திறனோடு
அவர்கள் பங்குபெறும் போட்டிகளில் வெற்றிபெற
வழிகாட்டுதலுக்கு வழிவகை செய்வது நன்று!
நமது பள்ளி!
எல்லா நிலைகளிலும் மென்மேலும் உயர்வு பெற்று,
இங்கு
உருவாக்கப்படுகின்ற ஒவ்வொரு மாணவ மாணவியரும்
உலகளாவிய புகழ் பெறவும்,
ஆசிரியர்கள் அனைவரும் நல்லாசிரியர்களாக உயர்நிலை அடையவும்,
பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர்
மற்றும் முன்னாள் மாணவர் சங்கத்தினர்
மகிழ்ச்சி பெறவும்,
அரசு ஆய்வாளர்கள் நற்பெயர் பெறவும்,
அரசின் திட்டங்கள்
அனைத்தும் வெற்றிபெற
எல்லாம் வல்ல இறையாற்றல் துணை இருக்க பிரார்த்திக்கிறேன்!
நன்றி!
என்றும் கல்விப் பணியில்,
துரை வரதராசன்,
” கல்வியாளர்”
கீழஉழுவூர் – தஞ்சாவூர்,
1975-1980 ( VI Std., – X Std.,) Alumni,
Govt. Hr.Sec.School, Vandayariruppu.
1989 – 2021 Formerly Principal,
Maxwell Martric. Hr. Sec. School, Thanjavur.
6 ஜனவரி 2022
தஞ்சாவூர்.